நடைப்பயிற்சி என்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் எளிய மற்றும் சிறந்த உடற்பயிற்சிகளில் ஒன்றாகும்.
எனவே, தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடல் மற்றும் மனதிற்குக் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றிப் பார்க்கலாம்...
● நடைப்பயிற்சி இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும், இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும்.
● தொடர்ச்சியான நடைப்பயிற்சி உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும்.
● நடைப்பயிற்சி செய்வதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக் குறைந்து உடல் எடை சீராகப் பேணப்படும்.
● இயற்கையான சூழலில் நடப்பது மனநிலையை மேம்படுத்தி, பதற்றத்தைக் குறைப்பதால் மன அழுத்தம் ஏற்படாமல் இருக்கும்.
● நடைப்பயிற்சி செய்வதால் உடலில் இன்சுலினின் பயன்பாடு அதிகரித்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
● தொடர்ச்சியான உடல் இயக்கம் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும்.
● நடைப்பயிற்சி கால்களின் தசைகளை வலுப்படுத்தவும், உடல் இயக்கத் திறனைப் பராமரிக்கவும் உதவுகிறது.