இந்தியாவின் தனியார் விண்வெளி நிறுவனமான Skyroot Aerospace மற்றும் அமெரிக்காவின் Reflect Orbital நிறுவனம் இணைந்து, இரவு நேரத்திலும் பூமியின் குறிப்பிட்ட பகுதிகளுக்குச் சூரிய ஒளியைப் பாய்ச்சும் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த ஒப்பந்தம் செய்துள்ளன. இதற்காக Skyroot நிறுவனத்தின் விக்ரம் ரக ரொக்கெட்டுகள் பயன்படுத்தப்படவுள்ளன.
விண்வெளியில் கண்ணாடிகள் பொருத்தப்பட்ட செயற்கைக்கோள்கள் மூலம் சூரிய ஒளியைப் பூமிக்குத் திருப்பிவிடுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் அவசரகால மீட்புப் பணிகள், கட்டுமானப் பணிகள் மற்றும் சூரிய மின்சக்தி உற்பத்தி போன்ற துறைகளுக்குப் பயன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இத்தொழில்நுட்பம் நடைமுறையில் எந்த அளவுக்குப் பயனளிக்கும் என்பது இன்னும் சோதிக்கப்பட வேண்டியுள்ளது. மேலும், இரவு வானத்தின் இயல்பைப் பாதிக்கும் ஒளி மாசுபாடு குறித்தும் கவலைகள் எழுந்துள்ளன. அத்துடன் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் திகதிகள் குறித்து எந்தவித தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.