25 Views
தாய்வானில் வறுமையில் வாடிய விவசாயி ஒருவர், தனது வாழ்க்கையில் வளம் பெருக வேண்டும் என இறைவனிடம் வேண்டியபோது, அவரது நிலத்தில் வட்ட வடிவிலான பச்சை இலைகளைக் கொண்ட ஒரு செடி முளைத்ததாகவும், அந்தச் செடியை வளர்த்து விற்பனை செய்ததன் மூலம் அவர் செல்வந்தரானதாகவும் அந்தக் கதை கூறுகிறது. இதனாலேயே அந்தச் செடிக்கு ‘மணி பிளான்ட்’ என்ற பெயர் ஏற்பட்டதாகவும் நம்பப்படுகிறது.
இந்தச் செடி அதிர்ஷ்டம், செழிப்பு மற்றும் நேர்மறையான ஆற்றலைக் குறிக்கும் ஒன்றாகக் கருதப்படுகிறது. வீட்டின் அழகை அதிகரிப்பதுடன், குறைந்த பராமரிப்பிலேயே நன்றாக வளரக்கூடிய தன்மையும் இதன் பிரபலத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக, தண்ணீரிலேயே இதனை வளர்க்க முடிவதால், இடவசதி குறைந்த வீடுகளிலும் பலர் ஆர்வத்துடன் வளர்த்து வருகின்றனர்.
ஆனால், இந்தச் செடியின் பின்னணியில் ஒரு உளவியல் உண்மையும் இருக்கிறது! வீட்டில் பசுமையான செடிகளை வளர்ப்பதும், அவற்றைப் பராமரிப்பதும் மனதுக்கு அமைதியையும் புத்துணர்ச்சியையும் அளிக்கக்கூடும். மன அழுத்தம் குறைந்து, கவனம் அதிகரிக்கும்போது அன்றாட வேலைகளிலும் சிறப்பாகச் செயல்பட முடியும். இதனால் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு மறைமுகமாக உதவலாம். வீட்டுக்குப் பசுமையையும் மனதுக்கு மகிழ்ச்சியையும் தரும் செடியாக இது திகழ்கிறது. அதிர்ஷ்டத்தைத் தேடி வளர்க்கும் இந்தச் செடி, உண்மையில் நம் வாழ்க்கையில் பசுமையையும் நம்பிக்கையையும் வளர்க்கிறது என்பதே நிதர்சனம்.