விண்வெளியில் கருந்துளைகள் தமக்கு அருகில் வரும் பொருட்களை விழுங்கி அழிப்பவை என்றே இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால், அவை புதிய கோள்களையும் நட்சத்திரங்களையும் உருவாக்கக்கூடும் எனப் புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
சூரியனைவிடப் பல மில்லியன் மடங்கு பெரிய கருந்துளைகளைச் சுற்றியுள்ள வாயு மற்றும் தூசுத் துகள்கள் ஒன்றிணைந்து புதிய கோள்களை உருவாக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கணினி உருவக ஆய்வுகளின்படி, இவ்வாறு உருவாகும் கோள்கள் வியாழன் அளவிற்குப் பெரியதாக இருக்கலாம். சில கோள்கள் வளர்ந்து நட்சத்திரங்களாகவும் மாறக்கூடும் எனக் கருதப்படுகிறது.
எனினும், கருந்துளைகளின் அதீத ஈர்ப்பு விசை காரணமாக இக்கோள்கள் அழியும் அபாயமும் உள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு உண்மையென உறுதிப்படுத்தப்பட்டால், கோள்கள் உருவாகும் விதம் குறித்த மனிதர்களின் புரிதலில் புதிய மாற்றம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.