இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஐந்து T20, 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது.
20 ஓவர் தொடருக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் ஒரு நாள் போட்டிக்காக நியூசிலாந்து அணி இன்று தேர்வு செய்யப்பட்டது.
காயத்தில் இருந்து குணம் அடைந்ததால் ரச்சின் ரவீந்திரா அணிக்கு திரும்பி உள்ளார். பெர்குசன், டிம் ஷெய்பர்ட் ஆகியோரும் அணியில் மீண்டும் இடம் பெற்றுள்ளனர்.