போர்த்துக்கல் கால்பந்து அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
போர்த்துக்கல் அணியின் முகாமில் இருந்து அவர் திடீரென வெளியேறியதைத் தொடர்ந்து, அவரது சர்வதேச கால்பந்து வாழ்க்கை முடிவுக்கு வருவதாக செய்திகள் பரவிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தான் உடல் தகுதியுடன் இருந்து, எனது கழக அணிக்காக சிறப்பாக விளையாடி, கோல்கள் அடித்துக் கொண்டிருந்தால்,தனக்கு விதிக்கப்படும் தண்டனை முடிந்த பிறகு போர்த்துக்கல் அணிக்காக விளையாட தான் தயாராக இருப்பதாக ரொனால்டோ தெரிவித்துள்ளார்.