சருமப் பராமரிப்பில் பயன்படுத்தப்படும் இயற்கை பொருட்களில் முல்தானி மெட்டிக்கும் முக்கிய இடம் உள்ளது. குறிப்பாக, சருமத்தில் காணப்படும் அதிகப்படியான எண்ணெய்ப் பசையை உறிஞ்சி, முகத்தைப் புத்துணர்ச்சியாக வைத்திருக்க இது உதவுவதாக கூறப்படுகிறது.
முல்தானி மெட்டி சருமத் துளைகளில் தேங்கியுள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை அகற்ற உதவுவதுடன், முகப்பரு மற்றும் வெயிலால் ஏற்படும் கருமை போன்ற சருமப் பிரச்சினைகளைக் குறைக்கவும் பயன்படுகிறது. இதனால் சருமம் சுத்தமாகவும் பொலிவாகவும் தோற்றமளிக்கலாம்.
தலைமுடி பராமரிப்பிலும் இதைப் பயன்படுத்துகின்றனர். உச்சந்தலையில் உள்ள அதிகப்படியான எண்ணெயைக் கட்டுப்படுத்தவும் பொடுகைக் குறைக்கவும் உதவக்கூடும். எண்ணெய் சருமம் உள்ளவர்கள் முல்தானி மெட்டியுடன் Rose water கலந்து பயன்படுத்தலாம்.வறண்ட சருமத்திற்கு தேன் அல்லது தயிருடன் கலந்து பயன்படுத்துவது குறித்து பரிந்துரைக்கப்படுகிறது.