'Natural Star' நானி நடிப்பில் நேற்று முன்தினம் வெளியாகிய 'The Paradise' திரைப்படம் இரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தாய்-மகன் பாசத்தை அடிப்படையாகக் கொண்ட அக்சன் கதையாக உருவாகியுள்ள 'The Paradise' திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கிறார்.
கலவையான விமர்சனங்களை இத் திரைப்படம் பெற்றிருந்தாலும் வெளியாகிய முதல் இரண்டு நாட்களில் இந்திய மதிப்பில் ரூ. 114 கோடி வசூலித்துள்ளதாகத் திரைப்படக்குழு அறிவித்துள்ளது.