இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபலமான கால்பந்துக் கழகமான Manchester City அணிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளில் 114இல் அந்த அணி குற்றவாளி எனக் குறிப்பிட்டு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் Manchester City அணிக்கெதிராக; பிரிமியர் லீக்கின் போது நிதி மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறி 115 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் ஒரு வழக்கைத் தவிர ஏனைய 114 வழக்குகளில் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டு Manchester City அணி குற்றவாளி என அதிகாரப்பூர்வமாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து Manchester City அணி நிர்வாகம் மேல்முறையீடு செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.