சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக லியோனல் மெஸ்ஸி சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பையடுத்து லியோனல் மெஸ்ஸியை கௌரவிக்கும் விதமாக ஆர்ஜென்டினா கால்பந்து சங்கம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
இந்த வாரம் ஆர்ஜென்டினாவில் இடம்பெறவுள்ள கால்பந்துப் போட்டிகளின் பத்தாவது நிமிடத்தில் போட்டியானது 60 வினாடிகள் நிறுத்தப்பட்டு மெஸ்ஸிக்காக அனைவரும் எழுந்து நின்று கைதட்டி அவரை கௌரவிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ஜென்டினா அணியில் நீண்ட காலம் விளையாடியுள்ள மெஸ்ஸி, 2022ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்ததுடன், இவ்வணிக்காக 125 சர்வதேச கோல்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.