இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள T20 தொடரிலிருந்து இலங்கை அணியின் தலைவரும், முன்னணி வீரருமான குசல் மெண்டிஸ் மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் உபாதை காரணமாக விலகியுள்ளனர்.
லங்கா பிரீமியர் லீக் (LPL) 2026 தொடரின் போது குசல் மெண்டிஸ் தொடை உபாதைக்கு முகம் கொடுத்திருந்தார். அதேநேரப் பினுர பெர்னாண்டோவு முதுகு உபாதைக்கு ஆளாகியிருந்தார். தற்போது இருவரும் உபாதை சிகிச்சைகளைப் பெற்று வரும் போது முழுமையாக குணமடையவில்லை. இதன் காரணமாக இங்கிலாந்து அணியுடனான T20 தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.