தாய்வானைச் சேர்ந்த 10 வயது மாணவர் சு Hsu Ting-wei , Novel Artificial Electronic Nose எனப்படும் மோப்பம் பிடிக்கும் செயற்கை நுண்ணறிவு கருவியை உருவாக்கி உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளார்.
கங் சியாவோ சர்வதேச பள்ளியில் பயிலும் இச்சிறுவன், விமான நிலையங்களில் பாதுகாப்புப் பணிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளான்.
நிகழ்நேர காற்று மாதிரி சேகரிப்பு அமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வாசனை அங்கீகார தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து விமான நிலைய X-Ray scanerகளுக்குப் பின்னால் இந்தக் கருவி பொருத்தப்படுகிறது.
இதன் மூலம், விமான நிலையங்களில் ஃபென்டனில் போன்ற தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள், வேதியியல் ஆபத்துகள் மற்றும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சையைப் பரப்பும் பன்றி இறைச்சி பொருட்கள் போன்றவற்றை மிகத் துல்லியமாகக் கண்டறிய முடியும்.
இவரின் இந்தச் சாதனைக்காக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற சிலிகான் வேலி சர்வதேச திருவிழாவில் தங்கப்பதக்கமும், சர்வதேச கண்டுபிடிப்பாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மிக உயர்ந்த சிறந்த கண்டுபிடிப்புக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது.