சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இலங்கை அணியைச் சேர்ந்த கமிந்து மெண்டிஸ் மற்றும் சொனால் தினுஷ ஆகியோர் அதிசிறந்த முன்னேற்றங்களை பெற்றுள்ளனர்.
தொடரில் தான் துடுப்பெடுத்தாடிய நான்கு இன்னிங்ஸ்களில் மூன்று சதங்கள் மற்றும் ஒரு அரைச்சதம் பெற்ற சொனால் தினுஷ 29 இடங்கள் முன்னேறி 25ஆவது இடத்தை பிடித்துள்ளதுடன், அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா நான்கு இடங்கள் பின்தள்ளப்பட்டு 26ஆவது இடத்தை பிடித்துள்ளார்.