கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி நியூயோர்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீர, வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.இன்று நடந்த போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா, ரஷ்யாவின் பொலினா லாட்சென்கோ உடன் மோதினார்.இதில் அதிரடியாக ஆடிய சபலென்கா 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.