கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி நியூயோர்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீர,வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.இன்று நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், சக நாட்டு வீராங்கனையான சோபியா கெனின் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய சோபியா கெனின் 6-2, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.இதன்மூலம் வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்து முதல் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறினார்.