புருவத்தை அடிக்கடி Trim செய்வதால் அது இன்னும் அடர்த்தியாக வளரும் என்று நினைப்பது
உண்மையல்ல!
புருவ முடியை Trim செய்த பிறகு, வெட்டப்பட்ட முடியின் முனை மழுங்கியதாக இருப்பதால், அது வளரும்போது சற்று தடிமனாக அல்லது கருமையாகத் தெரிந்திருக்கலாம். ஆனால் Trim செய்வதால் முடியின் வேர் பகுதியில் மாற்றம் ஏற்பட்டு, வளர்ச்சி அதிகரிப்பதில்லை.
அதே நேரத்தில், புருவத்தை அடிக்கடி அல்லது அதிகமாக Trim செய்தால் இயற்கையான வடிவவம் மாறிவிடலாம். குறிப்பாக அதிகமாக வெட்டிவிட்டால், மீண்டும் வளர சில வாரங்கள் ஆகலாம்.
புருவத்தை அடிக்கடி சரி செய்யாது தேவையான அளவு மட்டும் Trim செய்து, இயற்கையான வடிவத்துடன் பாதுகாப்பது சிறந்தது. சிறிய மாற்றமே முகத்தின் முழு வடிவத்தை மாற்றிவிடும் என்பதால், புருவத்தை Trim செய்யும்போது கவனம் மிக அவசியமாகும்.