ஆரோக்கியத்தை அதிகரித்து உடலை வலுவடையச் செய்யும் பழங்கள், மரக்கறிகள் மற்றும் தானியங்களைத் தினமும் உண்டோமேயானால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
அவ்வாறு நாம் தினமும் உண்ண வேண்டிய சில உணவுகளையும், அவை உண்ணக்கூடிய நேரம் மற்றும் உண்ணக்கூடாது நேரம் என்னவென்பதைப் பற்றியும் அறிந்து கொள்வோம்.
● எதிர்ப்பு சக்தி மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வாழைப்பழத்தை சாப்பிடச் சிறந்த நேரம் மதியம். ஆனால், இரவில் சாப்பிடக்கூடாது.
● சாமிபாட்டுக்கு உதவும் Orange பழத்தை உண்ண சிறந்த நேரம் மதியம். ஆனால், காலையில் உண்ணக்கூடாது.
● இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதயத்தை வலுப்படுத்தும் நட்ஸ்களை உண்ணும் நேரம் மதியம். ஆனால், இரவில் சாப்பிடக்கூடாது.
● ஆரோக்கியம் நிறைந்த தயிரை உண்ண உகந்த நேரம் இரவு. ஆனால், காலையில் உண்ணக்கூடாது.
● இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் அப்பிள் பழத்தை உண்ணும் நேரம் காலை வேளையாகும். ஆனால், இரவில் உண்ணக்கூடாது.