தக்காளியில் காணப்படும் Antioxidants இரத்தக் கொதிப்பு மற்றும் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. இதேவேளை தக்காளியில் காணப்படும் Vitamin A கண் பார்வையை சீராக்குகிறது.
தக்காளியில் மா சத்து குறைவாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் இதனை உணவில் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். ஆண்கள் தினமும் தக்காளி சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைகிறது.
தக்காளியில் காணப்படும் சத்துக்கள் சருமத்திற்கு பொலிவையும், கூந்தலுக்கு வலிமையையும் தருகின்றன. குறைவான கலோரிகளும் அதிக நீர்ச்சத்தும் கொண்டிருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக தக்காளியை உணவில் சேர்க்கலாம்.