நாடளாவிய ரீதியில் பெய்து வரும் மழை காரணமாகப் பல இடங்களில் தொற்று நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
டெங்குக் காய்ச்சல், சளி, வாந்திபேதி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொற்று நோய்களிலிருந்து இலகுவாக எங்களை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்...
● வெளியிடங்களுக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பிய பின் உடனடியாகக் குளிப்பதுடன், கைகளை சவர்க்காரமிட்டு நன்றாகக் கழுவ வேண்டும்.
● வீட்டிலிருந்தாலும் சரி, வெளியிடங்களுக்குச் சென்றாலும் சரி சுத்தமான குடிநீரைப் பருக வேண்டும்.
● நுளம்புகள் பெருகும் இடங்களை உடனடியாக அகற்ற வேண்டும்.
● உணவை சுத்தமாகத் தயாரித்து பாதுகாப்பான முறையில் உட்கொள்ளல் வேண்டும்.
● மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று உரிய தடுப்பூசிகளைப் பெற வேண்டும்.