20 Views
பிரான்சின் லியோன் (Lyon) நகர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் அண்மையில் உயிரிழந்தார். அவரது இறப்புக்கு ஷமோண்டா வைரஸ் தொற்று காரணமாக இருக்கலாம் என்று பிரான்ஸ் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
குறித்த வைரஸ் சிறிய ஈக்கள் மூலமாக கால்நடைகளுக்குப் பரவி தொற்றை ஏற்படுத்தும் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பத்தில் இந்த ஷமோண்டா வைரஸ் மனிதர்களுக்குப் பரவாது என்றே கருதப்பட்டது. ஆனால் இப்போது மனிதர்களையும் தாக்க ஆரம்பித்துள்ளது.
ஷமோண்டா வைரஸ் தாக்கம் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.