பாகற்காயில் கலோரிகள் மிகவும் குறைவு, ஆனால் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம். இது உடலில் உள்ள செரிமான மண்டலத்தை நன்றாகத் தூண்டி, கொழுப்பைக் கரைக்கவும், தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது. இதனால் உடல் எடை வேகமாக குறையும்.
பாகற்காய் ஒரு சிறந்த நச்சு நீக்கியாக செயல்படுகிறது. இது கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரல் அழற்சி மற்றும் மஞ்சள் காமாலை போன்ற பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது. மேலும், குடலில் உள்ள தேவையற்ற புழுக்களையும் அழிக்கிறது.
பாகற்காயில் Vitamin C நிறைந்துள்ளதால் தொற்று நோய்கள் மற்றும் வைரஸ் பாதிப்புகளில் இருந்து உடலைப் பாதுகாக்கிறது.
பாகற்காய் சாற்றைத் தொடர்ந்து குடித்து வர, இரத்தத்தைச் சுத்திகரித்து முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் தோல் நோய்களான அரிப்பு, சொரியாஸிஸ் போன்றவற்றை குணமாக்க உதவுகிறது. இதில் உள்ள Vitamin A முடி உதிர்வைத் தடுத்து கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
பாகற்காய் உடலுக்கு நல்லது என்றாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. கர்ப்பிணிப் பெண்களும், ஏற்கனவே சர்க்கரை நோய்க்குத் தீவிர மருந்துகள் எடுப்பவர்களும் மருத்துவரின் ஆலோசனையின்றி அதிகளவில் பாகற்காய் சாறு குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.