பலாப்பழத்தில் Vitamin C மற்றும் Antioxidants அதிக அளவில் நிறைந்துள்ளன. இவை உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களின் செயற்பாட்டை தூண்டி, சளி, காய்ச்சல் மற்றும் பல்வேறு தொற்று நோய் கிருமிகள் தாக்காமல் உடலை பாதுகாக்கிறது.
பலாப்பழத்தில் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது. இவை குடலின் இயக்கத்தைச் சீராக்கி, மலச்சிக்கல் மற்றும் செரிமானப் பிரச்சினைகளை எளிதில் குணமாக்குகிறது.
பலாப்பழத்தில் உள்ள பொட்டாசியம் உடலில் சோடியத்தின் அளவை சமன்படுத்தி இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் குறைவடைகிறது.
பலாப்பழத்தில் காணப்படும் Vitamin A கண் பார்வையை கூர்மையாக்க உதவுவதுடன், மாலைக்கண் நோய் வராமல் தடுக்கிறது.
பலாப்பழத்தில் Copper சத்து நிறைந்துள்ளதால், Thyroid சுரப்பியை ஆரோக்கியமாக வைத்து, Hormone சமநிலையின்மைப் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கிறது.