49 Views
தொலைபேசித்திரையின் மேல் பகுதியில் தோன்றும் பச்சை மற்றும் செம்மஞ்சள் நிறப் புள்ளிகள், பொதுவாக Camera மற்றும் Microphone என்பன பயன்படுத்தப்படுவதைக் குறிக்கும் பாதுகாப்பு அறிகுறிகளாகும். குறிப்பாக, நாம் பயன்படுத்தாத நேரத்திலும் இவை தோன்றினால், எந்தச் செயலி அவற்றைப் பயன்படுத்துகிறது என்பதைச் சரிபார்ப்பது அவசியமாகும். iPhone போன்ற சாதனங்களில் Camera பயன்பாட்டிற்கு பச்சை நிறமும், Microphone பயன்பாட்டிற்கு செம்மஞ்சள் நிறமும் தனித்தனியாகக் காட்டும்.
ஆனால் சில Android தொலைபேசிகளில் Camera அல்லது Microphone பயன்பாட்டுக்கு பொதுவாக பச்சை நிறப் புள்ளி மட்டும் தோன்றும்.
தொலைபேசி பயனர்கள் Settings பகுதிக்குச் சென்று Camera மற்றும் Microphone இருப்பிட அனுமதிகளைச் சரிபார்த்து, தேவையற்ற செயலிகளின் அனுமதிகளை நீக்கிக்கொள்ளலாம். எனினும், இந்தப் புள்ளிகள் தோன்றுவது மட்டும் இரகசியக் கண்காணிப்பு நடைபெறுவதற்கான ஆதாரமல்ல எனத் தொழில்நுட்ப ரீதியாகப் புரிந்துகொள்வது முக்கியமாகும்.