26 Views
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சூரியிடம் தொகுப்பாளர்கள் அட்டையில் ஒரு பெயரை எழுதிக் கொடுத்தனர். அவர் மேடையில் நின்றபோது, அதில் யார் பெயர் எழுதியிருக்கிறது? எனத் தொகுப்பாளர் கேட்டார்.
அதற்கு சூரி, “நீங்கள் யார் பெயரை எழுதிக்கொடுத்தீர்களோ அவர் பெயர்தான் இருக்கிறது” என்றார். மேலும், தொகுப்பாளர் ”படத்திலிருந்து ஹீரோவை கூப்பிட போகிறார்களா? இல்லை, இயக்குநரையா?” எனக் கேட்டார்.
சூரி, ”நீங்கள் விருப்பப்படும் ஆளைக் கூப்பிட முடியாது. கூப்பிடும்போது யாரெனத் தெரிந்துகொள்ளுங்கள்” என்றார். ஏன் திடீரென சூரி கோபமாகப் பதிலளித்தார் என சமூக வலைதளங்களில் இந்த விடியோவை பகிர்ந்து வருகின்றனர். அதில், சிலர் சூரிக்குப் படிக்கத் தெரியாது என்பதைக் குத்திக்காட்டுவது போல் தொகுப்பாளர் கேட்டதுதான் பிரச்னை என ஆதரவாகவும் பதிவிட்டு வருகின்றனர்.