தினமும் நாம் சாப்பிடும் உணவில் சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ளவும், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க முடியும்.
அவ்வாறான மாற்றங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்...
● வெள்ளை அரிசியுடன் சிவப்பு அரிசி அல்லது குறைவாகத் தீட்டப்பட்ட அரிசியையும் சேர்த்து உண்பதன் மூலம் உணவை சமச்சீராகப் பேணலாம்.
● தினமும் கீரை, போஞ்சி, கரட், பூசணி, வெண்டிக்காய் போன்ற காய்கறிகளையும்; கொய்யா, வாழைப்பழம் பழங்களை உண்ணுதல்.
● முட்டை, மீன், கடலை, பருப்பு மற்றும் பயறு போன்ற புரத உணவுகளை உண்ணுதல்.
● உப்பு மற்றும் இனிப்பின் அளவைக் குறைத்தல்.
● இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்களுக்குப் பதிலாக போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
இத்தகைய உணவுக் கட்டுப்பாடுகளுடன் உடற்பயிற்சியையும் இணைத்தால் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழலாம்.