பூமியைச் சுற்றியுள்ள காந்தப்புலம் சூரியக் காற்று மற்றும் விண்வெளியில் இருந்து வரும் கதிர்வீச்சுகளிலிருந்து நம்மைக் காக்கும் முக்கிய பாதுகாப்புக் கவசமாக உள்ளது. இந்த காந்தப்புலத்தில் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
பூமியின் வடக்கு மற்றும் தெற்கு காந்த துருவங்கள் வரலாற்றில் பலமுறை இடம் மாறியுள்ளன. கடைசியாக சுமார் 7.8 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு காந்த துருவ மாற்றம் ஏற்பட்டதாக நாசா தெரிவிக்கிறது. எனினும், தற்போதைய மாற்றங்களை மட்டும் வைத்து உடனடியாக துருவங்கள் மாறப்போகின்றன என்று கூற முடியாது.
காந்தப்புலம் சில பகுதிகளில் வலுவிழந்து வருவது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தாலும், துருவ மாற்றம் ஏற்பட்டாலும் அது திடீரென நிகழும் சம்பவம் அல்ல. இதுபோன்ற மாற்றங்கள் நீண்ட காலத்திற்குள் படிப்படியாக நடைபெறும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.