மிகவும் குளிர்ந்த நீரை நேரடியாக குடிப்பதை தவிர்க்க வேண்டும் இது செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும் மாறாக மண் பானை நீரை பருகுவது சிறந்தது.
அதிகமான மசாலா மற்றும் வறுத்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
அதிகமாக தேநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். கோடையில் உணவுகள் சீக்கிரம் கெட்டுவிடும் என்பதால், முதல் நாள் சமைத்த உணவுகள் மற்றும் சாலையோரக் கடைகளில் திறந்து வைக்கப்பட்டுள்ள உணவுகளைச் சாப்பிட கூடாது.
காலை 11 மணி முதல் மதியம் 3:30 மணி வரை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்கவும்.
கறுப்பு போன்ற அடர் நிற ஆடைகள் வெப்பத்தை அதிகமாக ஈர்க்கும். அதேபோல் நைலோன், பொலிஸ்டர் போன்ற செயற்கை ஆடைகளைத் தவிர்த்து பருத்தி ஆடைகளை மட்டும் அணியுங்கள்.
தாகம் எடுத்த பிறகுதான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம். தாகம் இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும்.