செயற்கை நுண்ணறிவை குறிக்கும் ‘AI’ என்ற பெயருக்கு பதிலாக ‘Super Intelligence’ (SI) என்ற பெயரை பயன்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதன்படி அமெரிக்க அரச ஆவணங்களில் ‘SI’ என்ற சொல் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களுடன் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பில், செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு தொடர்பான தன்னார்வ ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்திடப்பட்டது.
குறித்த நிறுவனங்கள் தங்களது AI அமைப்புகளின் பாதுகாப்பை கண்காணிக்கவும், சுயாதீன தணிக்கையாளர்களுடன் இணைந்து செயற்படவும் ஒப்புக்கொண்டுள்ளன.