89 Views
இளம் தலைமுறையினர்களுக்காக ChatGPTஇன் புதிய Teen Experienceஐ Open AI அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பெற்றோர், பிள்ளைகள் ChatGPT பயன்படுத்தும் நேரத்தை “Quiet Hours” மூலம் கட்டுப்படுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் நேரடியாக விடையைப் பெறுவதற்குப் பதிலாக படிப்படியாக சிந்தித்து கற்றுக்கொள்ள உதவும் “Study Mode” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரங்களில் Study Mode இயங்கும் வகையிலும் அமைக்க முடியும்.
13 முதல் 17 வயதிற்குட்பட்ட பயனர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கட்டுப்பாடுகளும், பெற்றோருக்கான கண்காணிப்பு வசதிகளும் வழங்கப்படுவதன் மூலம், இளம் வயதினருக்கான AI ஐ பாதுகாப்பாகவும் கல்விக்காகவும் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக Open AI தெரிவித்துள்ளது.