ஒருவரது அழகை மேம்படுத்தி காட்டுவதில் தலைமுடி முக்கிய பங்கினை வகிக்கிறது. அதுவும் அடர்த்தியான தலைமுடியைப் பெறுவதே அனைவரது விருப்பமாக இருக்கும். ஆனால் தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல், வேலைப்பளுவால் மிகுந்த மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் தலைமுடியின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக தலைமுடி உதிர்வை அதிகமானோர் சந்திக்கின்றனர்.
இதற்கான ஒரு தீர்வாக நாளாந்தம் நாங்கள் பயன்படுத்தும் எண்ணெய்யுடன் கருவேப்பிலையை சேர்த்து பாவிக்கும் பொழுது முடி உதிரும் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளலாம்.
அதாவது, கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தும் போது அது முடியில் ஏற்படும் புரத இழப்பைக் குறைத்து, தலைமுடி உதிர்வை தடுத்து, முடியின் வளர்ச்சியையும், அடர்த்தியையும் அதிகரிக்கும்.
நல்லெண்ணெயுடன் கறிவேப்பிலை சேர்த்து சூடேற்றி, அந்த எண்ணெயை தலைக்கு பூசி சிறிது நேரம் ஷாம்பு பயன்படுத்தி அலசும் போது, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
பாதாம் எண்ணெயில் சிறிது கறிவேப்பிலை சேர்த்து ஊற வைத்து, அந்த எண்ணெயை தலைமுடிக்குபூசி 30 நிமிடம் கழித்து ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது மயிர்கால்கள் வலிமையாகி, முடி உதிர்வதைத் தடுத்து, புதிய முடி வளர வழிவகை செய்யும்.