ஷபாலி வர்மா சாதனை!
SOORIYAN GOSSIP - ஷபாலி வர்மா சாதனை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
10வது மகளிர் ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. நேற்று நடந்த முதல் அரையிறுதியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின .
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்களை பெற்றது. ஆரம்ப வீராங்கனை ஷபாலி வர்மா அதிரடியாக ஆடி அரைச் சதம் கடந்து 64 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இந்நிலையில், இந்த ஆண்டில் அதிக ஓட்டங்கள் குவித்த இந்திய வீராங்கனையாக ஷபாலி வர்மா சாதனை படைத்துள்ளார்.