107 Views
மாதவிடாய் நாட்களில் கீழ் வயிற்றில் வலி, பிடிப்பு என பலருக்கும் தொந்தரவு இருக்கும். இதை ஓரளவு சமாளிக்க வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது ஒரு எளிய வழி. Heating pad அல்லது வெந்நீர் போத்தலை துணியில் சுற்றி கீழ் வயிற்றில் வைக்கலாம். அத்தோடு வெதுவெதுப்பான நீர் குடிப்பது, இஞ்சி டீ போன்ற சூடான பானங்களை அளவோடு எடுத்துக்கொள்வது, நடைப்பயிற்சி செய்வதும் சிலருக்கு நிம்மதி தரலாம். கீழ் வயிற்றில் மென்மையான மசாஜ் வலியை குறைக்க உதவும் .
சிலர் இஞ்சி அல்லது பெருஞ்சீரகம் கலந்த பானங்களை பயன்படுத்துகிறார்கள். வெந்தயம், சீரகம் போன்ற பாரம்பரிய முறைகளும் பல வீடுகளில் பின்பற்றப்படுகின்றன. ஆனால் இவை எல்லாம் அனைவருக்கும் வலியை குறைக்க செய்யும் என்று உறுதியாக சொல்ல முடியாது. முக்கியமாக, போதுமான தண்ணீர் குடிப்பதும் ஓய்வு எடுப்பதும் மிக முக்கியம் .
ஆனால் மாதவிடாய் வலி தாங்க முடியாத அளவுக்கு அதிகமாக, தொடர்ந்து அதிகரித்து வந்தாலோ, வழக்கத்திற்கு மாறாக அதிக இரத்தப்போக்கு இருந்தாலோ, அல்லது வலி காரணமாக அன்றாட செயல்களையே செய்ய முடியாத நிலை ஏற்பட்டாலோ மருத்துவரை அணுகுவது நல்லது. குறிப்பாக ஒவ்வொரு மாதமும் வலி வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு இருந்தால், அதன் காரணத்தைச் சரிபார்ப்பது மிக முக்கியம்.