123 Views
தினமும் தலைக்கு குளிப்பதால் நேரடியாக முடி கொட்டாது. ஆனால் அதிகமாக அலசுவது வறட்சியை ஏற்படுத்தும்.நீண்ட நாட்கள் அலசாமல் இருப்பதும் எண்ணெய்ப்பசையை அதிகரிக்கலாம். அதனால் தலைமுடியின் தன்மைக்கு ஏற்ப குளிக்கும் இடைவெளியைத் தீர்மானிக்க வேண்டும்.
உங்களுடைய முடி சுருள் முடியாக இருந்தால் 3–4 நாட்களுக்கு ஒருமுறையும், எண்ணெய்ப்பசை அதிகமுள்ள தலைமுடிக்கு வாரத்தில் 2–3 முறையும் குளிக்கலாம்.
தலைக்கு குளிக்கும் போது தலைமுடியின் தன்மைக்கு ஏற்ற மென்மையான தலைமுடி கழுவும் திரவத்தைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். மேலும் தலைமுடியை கழுவுவதற்கு முன்பு எண்ணெய் பூசுவது ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவுகின்றது.