சமூக வலைதளங்களில் தற்போது 1980-களின் தோற்றத்தில் புகைப்படங்களை உருவாக்கும் புதிய AI டிரெண்ட் வைரலாகி வருகிறது.
ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி, தற்போதைய புகைப்படங்களை பழைய கால உடை, சிகை அலங்காரம், மேக்கப் மற்றும் விண்டேஜ் கேமரா தோற்றத்துடன் மாற்றி வருகின்றனர்.
இதற்காக புகைப்படத்தை AI கருவியில் பதிவேற்றி, 1980-களின் இந்திய விண்டேஜ் தோற்றம், பழைய கால பின்னணி மற்றும் திரைப்பட கேமரா பாணி போன்ற விருப்பங்களை குறிப்பிடலாம். இதன் மூலம் பழைய குடும்ப ஆல்பம் புகைப்படங்களைப் போன்ற தத்ரூபமான படங்களை எளிதில் உருவாக்க முடிவதால், இந்த டிரெண்ட் இணையத்தில் அதிக கவனம் பெற்று வருகிறது.