21 Views
தேவையான பொருட்கள்:
• கேழ்வரகு மா – 2 மேசைக்கரண்டி
• தண்ணீர் – 1½ cup
• மோர் – ½ cup
• உப்பு – தேவையான அளவு
• சின்ன வெங்காயம் – சிறிதளவு
• கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
முதலில் கேழ்வரகு மாவை சிறிது தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவும். மீதமுள்ள தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் கரைத்த மாவை சேர்த்து 2–3 நிமிடங்கள் தொடர்ந்து கிளறவும். அடுப்பை அணைத்த பிறகு சிறிது ஆறவிட்டு, மோர் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும். மோர் சேர்க்கும்போது கூழ் மிகவும் சூடாக இருக்கக்கூடாது இல்லையெனில் மோர் திரண்டுபோகும் வாய்ப்புள்ளது .
மேலே சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்தால் சுவையான கேழ்வரகு கூழ் தயார்!