அமெரிக்காவின் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா(NASA), நிலவில் புதிதாய் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொள்வதற்காக இந்தியாவின் முதன்மை தேசிய விண்வெளி அமைப்பான இஸ்ரோவிற்கு(ISRO) அழைப்பு விடுத்துள்ளது.
நிலவின் தென் துருவத்தில் மனிதர்கள் நீண்ட காலம் தங்கி ஆராய்ச்சி செய்வதற்கான நிரந்தரத் தளத்தை அமைக்கும் புதிய திட்டத்தை நாசா பிரம்மாண்டமாக ஆரம்பிக்க உள்ளது.
இந்தத் திட்டத்தில் தங்களுடன் இணைந்து கொள்வதற்காக, நிலவின் தென் துருவத்தில் இறங்கிய ஒரே நாடான இந்தியாவிற்கு; பெங்களூரில் நடைபெற்ற இந்திய, அமெரிக்க சிவில் விண்வெளிக் கூட்டத்தில் நாசாவால் அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆராய்ச்சித் திட்டத்தில் இரண்டு நாடுகளும் இணைந்து ஆய்வில் ஈடுபடுமாயின், நிலவில் மனித குலத்தின் முதல் ஆய்வுத் தளம் அமைக்கப்படும் என விண்வெளி ஆராய்ச்சி வல்லுநர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.