தற்போதைய வேகமான வாழ்க்கை முறையில் பலருடைய விருப்ப உணவுகளாக இருப்பவை, குறைந்த நேரத்தில் தயாரிக்கப்படும் துரித உணவுகள்தான். அவற்றுள் நூடில்ஸானது குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் நபர்களின் விருப்பமான தேர்வாக இருக்கிறது.
பெரும்பாலானோர் அடிக்கடி சாப்பிடும் இந்த நூடில்ஸில் அதிக அளவு உப்பு, சுவையூட்டிகள், பாதுகாப்பு சேர்மங்கள், செயற்கை நிறம் மற்றும் குறைந்தளவு நார்ச்சத்துகள் காணப்படுவதால் உடல் நலத்திற்கு அதிக பாதிப்புகள் ஏற்படுமென்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தினமும் நூடில்ஸை உணவாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு ஏற்படும் முக்கிய பிரச்சினைகள் பின்வருமாறு...
● உடல் எடை அதிகரிக்கும்.
● இதய ஆரோக்கியம் பாதிப்படையும்.
● நீரிழிவு நோய் அபாயம் ஏற்படும்.
● குழந்தைகளின் வளர்ச்சி பாதிப்படையும்.
● சிறுநீரகத்திற்கு அழுத்தம் ஏற்படும்.
● உடலில் சத்துகள் குறைவாக சேரும்.
இருப்பினும், நூடில்ஸை முற்றிலும் தவிர்க்க முடியாவிடின் அதனை எப்படி ஆரோக்கியமாக சாப்பிடலாம் என்பதையும் பார்க்கலாம்...
● முட்டை அல்லது பன்னீர் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுதல்.
● கரட், போஞ்சி, பட்டாணிக் கடலை மற்றும் குடைமிளகாய் போன்ற காய்கறிகளைச் சேர்த்து சாப்பிடுதல்.
● சுவையூட்டிகளை அதிகளவு சேர்க்காமல் குறைவாகச் சேர்த்தல்.
● முழு தானிய அடிப்படையிலான நூடில்ஸைத் தேர்வு செய்து சாப்பிடுதல்.
● வாரத்திற்கு ஒரு முறைக்கு மேல் நூடில்ஸ் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
முக்கியமாகக் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளிகள் ஆகியோர் இந்த நூடில்ஸைத் தவிர்ப்பது நல்லது.