நாம் அன்றாடம் வீட்டில் உணவுகளுக்கு பயன்படுத்தும் நெய் உணவுகளுக்கு சுவையை மட்டுமில்லாது உடலுக்கு பல நன்மைகளையும் வழங்குகின்றது. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
தினமும் இரவில் தூங்குவதற்கு முன்னர் சிறிதளவு நெய்யை சூடாக்கிய பின்னர் பாதங்களுக்கு தடவி மசாஜ் செய்து வந்தால் இரத்த ஓட்டம் சீராகிறது. அதுமட்டுமன்றி மன அழுத்தத்தைக் குறைத்து நல்ல தூக்கத்தை தருவதோடு பித்த வெடிப்பும் குறைக்கிறது.