முகப்பரு மற்றும் கருந்திட்டுகள் என்பவை வெளிப்புற சருமப் பிரச்சினைகள் மட்டுமல்ல. அவை உடலின் உள்ளே ஏற்படும் பித்த தோஷ சமநிலையின்மையினாலும் உருவாகக்கூடியது.
இதனை தடுப்பதற்கான இயற்கை வழிகள் எங்கள் வீடுகளிலேயே உள்ளது.
அதாவது, புதிய வேப்பிலைகளை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இவ்வாறு செய்யும் பொழுது முகத்திலுள்ள பக்டீரியாக்களை அழித்து முகப்பரு வருவதைத் தடுக்கிறது.
கஸ்தூரி மஞ்சள் தூளை சிறிது பால் அல்லது தேனுடன் கலந்து தொடர்ந்து முகத்தில் பூசிவர சரும நிறத்தை மேம்படுத்தி கருந்திட்டுகளை மறையச் செய்யும்.
கற்றாழை ஜெல்லுடன் சில துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து கருந்திட்டுகள் உள்ள பகுதியில் பூசி வர, கரும்புள்ளிகள் மறையும்.
தூய சந்தனப் பொடியை பன்னீருடன் (Rose water) கலந்து முகத்தில் 'Pack' ஆகப் பயன்படுத்தினால் இவை முகப்பருவினால் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, அதனால் ஏற்படும் வடுக்கள் மற்றும் கரும்புள்ளிகளை விரைவாகக் குணமாக்கும்.