76 Views
நரை முடி என்பது, தலைமுடி தனது இயற்கையான நிறத்தை இழந்து, வெளுத்தோ அல்லது சாம்பல் நிறத்திலோ மாறுவதைக் குறிக்கிறது.
நரை முடியை இயற்கையாகக் கறுப்பாக்கவும் மெலனின் உற்பத்தியை அதிகரிக்கவும், முடியின் வேர்களை வலுப்படுத்தவும் நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை சாறு, கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய் போன்றவை சிறந்தவை.
நெல்லிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, கறிவேப்பிலையுடன் சேர்த்து அரைத்து விழுதாக்கிக் இந்த விழுதை தலையில் தடவி, 30 நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் கொண்டு கழுவலாம்.
மருதாணி பொடியுடன், காய்ச்சிய coffe powder மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் செய்து தலைமுடியில் தடவி 2 மணி நேரம் ஊறவைத்து, தலைமுடியை கழுவினால் இயற்கை முறையில் முடி கருமை பெறும்.