இந்திய சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக மாறியுள்ள 'ராமாயணா' இந்த வருடம் தீபாவளிக்குத் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பிரம்மாண்டப் பொருட்செலவில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தை இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கியுள்ளதுடன், ரன்பீர் கபூர் இராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், நடிகர் யஷ் இராவணனாகவும் நடித்துள்ளனர்.
இசைப்புயல் A.R.ரஹ்மான் மற்றும் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ள 'ராமாயணா' திரைப்படத்தின் Trailer எதிர்வரும் 24ஆம் திகதி வெளியாகுமெனத் திரைப்படக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.