412 Views
Signal bar முழுமையாக காட்டினாலும், சில நேரங்களில் call quality மற்றும் data speed குறைவதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர். Tower congestion, இட வசதி மற்றும் network load போன்ற காரணிகள் இதற்கு காரணமாக இருக்கலாம் என தொழில்நுட்ப வட்டாரங்கள் கூறுகின்றன.
தொலைபேசி சிக்னல் அடிக்கடி துண்டிக்கப்பட்டால் முதலில் உங்கள் தொலைபேசியை Restart செய்து பாருங்கள். பின்னர் Airplane Mode-ஐ ON செய்து சில விநாடிகள் கழித்து OFF செய்தால் network மீண்டும் connect ஆகும்.
SIM card மற்றும் Network Settings என்பவற்றை சரிபார்க்கவும். SIM-ஐ எடுத்து மீண்டும் பொருத்திப் பாருங்கள்.
Settings → Mobile Network சென்று 4G/5G Auto mode தேர்வு செய்யவும். Phone software update இருந்தால் update செய்யவும்.
பிரச்சினை தொடர்ந்து இருந்தால், அது உங்கள் பகுதியில் உள்ள tower signal அல்லது network congestion காரணமாக இருக்கலாம். உங்கள் network providerற்கு complaint பதிவு செய்து, SIM பழையதாக இருந்தால் புதிய SIM ஒன்றினை மாற்றியும் முயற்சி செய்யலாம்.
இந்நிலையில், தொலைத்தொடர்பு சேவை தரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு பயனர்கள் தங்களது சேவை வழங்குநர்களிடம் முறைப்பாடு செய்யலாம் என்றும், தீர்வு கிடைக்காவிட்டால் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிடம் புகார் அளிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.