ஐரோப்பியக் கால்பந்து இரசிகர்களின் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் நவம்பர் 17ஆம் திகதி வரை நேஷன்ஸ் லீக் இடம்பெறவுள்ளது.
இந்தத் தொடரில் போர்த்துக்கல் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடவுள்ள தகவலானது அவரது இரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
41 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது சர்வதேச ஓய்வு குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடாத நிலையில், தற்போது இவர் இந்த நேஷன்ஸ் லீக் தொடரில் போர்த்துக்கல் அணிக்காகத் தலைமை தாங்கி விளையாடவுள்ள செய்தி கால்பந்து இரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.