39 Views
தேனீக்கள் தனித்தனியாக வாழ்வதைவிட, கூட்டமாக இணைந்து செயற்படும் உயிரினங்கள். குறிப்பாக தங்களது கூட்டுக்கு ஆபத்து ஏற்பட்டால், அங்குள்ள தேனீக்கள் ஒன்றிணைந்து எதிரியைத் தாக்கும். இதற்காகவே உணவு கிடைக்கும் இடம், அதன் திசை மற்றும் தூரம் போன்ற தகவல்களையும் ‘வாக்ல் டான்ஸ்’ எனப்படும் அசைவுகள் மூலம் ஒன்றுக்கொன்று தெரிவிக்கின்றன.
மேலும் ராணி தேனீ எனப்படும், தேனீ தன் உடலில் இருந்து ஒருவித வேதிப்பொருளை வெளியிடுகிறது. இது ஒட்டுமொத்த தேன்கூட்டையும் ஒற்றுமையாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. ராணித் தேனீ வயதாகி இந்த வேதிப்பொருள் குறையும்போது, வேலைக்காரத் தேனீக்கள் புதிய ராணியை உருவாக்கத் தொடங்கும் இவ்வாறான தேனீக்களுக்கு ஆபத்து ஏற்படும் போது பாதுகாப்பு தேனீக்கள் உடனடியாக சென்று மற்ற தேனீக்களையும் அழைத்து வரும் இதன் காரணமாகவே தேனீக்கள் கூட்டமாக எம்மைத் தாக்குகின்றன.
மற்றொரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால், வேலைக்காரத் தேனீ பொதுவாக கொட்டிய பிறகு கொடுக்கை இழப்பதால் உயிரிழக்கிறது. அதேவேளை, தேனீக்கள் மனிதர்களுக்கும் இயற்கைக்கும் முக்கியமான மகரந்தச் சேர்க்கைப் பணியைச் செய்கின்றன. ஆபத்து வந்தால் கூட்டமாக ஒன்று திரண்டு தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் இந்தச் சிறிய உயிரினங்களின் ஒற்றுமைதான் இப்போது இணையத்தில் ஆச்சரிய தகவலாக பேசப்படுகிறது.