கற்றாழையில் பல மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன. சோற்றுக்கற்றாழையை தோல் நீக்கி நன்றாக கழுவி பின்னர் அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மற்றும் மாலையில் சாப்பிட்டு வந்தால் பெண்களின் கர்ப்பப்பை பலமடையும். மேலும் மாதவிடாய் பிரச்சினைகளும் நீங்கும்.
குடலைச் சுத்தம் செய்து மலச்சிக்கல் பிரச்சனையை உடனடியாகப் போக்க கற்றாழை உதவுகிறது.
உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் கற்றாழை அதிகரிக்கிறது. சில ஆய்வுகளின்படி, கற்றாழை சாறு குடித்து வந்தால் நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கவும் உதவுகிறது.