ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘சிக்மா’ திரைப்படத்தின் Trailer மற்றும் இசை வெளியீட்டு விழா நாளைய தினம் சென்னையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், திரைப்படம் ஒக்டோபர் 2ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இத்திரைபடத்திற்கு தமன் இசையமைத்துள்ளதுடன் ,பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்ஷன் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி கவனம் பெற்றுள்ளன.
முன்னதாக ஜூலை 31ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த ‘சிக்மா’, பின்னர் ஒத்திவைக்கப்பட்டு தற்போது ஒக்டோபர் 2 ஆம் திகதி வெளியாகவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் இத்திரைபடத்தின் Trailer மற்றும் இசை வெளியீட்டு நிகழ்வினை தற்போது இரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.