39 Views
மொத்தம் 14 Chess போட்டிகள் வரை நடைபெறவுள்ள நிலையில், முதலில் 7.5 புள்ளிகளைப் பெறும் வீரர் உலக Champion பட்டத்தை வெல்வார். 2024ஆம் ஆண்டு தனது 18 வயதில் உலக Champion பட்டத்தை வென்று வரலாறு படைத்த குகேஷ், இம்முறை தனது பட்டத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் களமிறங்குகிறார்.
மறுபுறம், வலுவான ஆட்டத்திறனுடன் களமிறங்கும் சிந்தரோவ், குகேஷுக்குக் கடும் சவால் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியில் சிந்தரோவ் வெள்ளைக் காய்களுடனும், குகேஷ் கறுப்புக் காய்களுடனும் விளையாடவுள்ளனர். இரு இளம் நட்சத்திரங்களின் மோதலில் உலக Chess மகுடத்தைத் தக்கவைக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.