62 Views
கடந்த 2005ஆம் ஆண்டு இரண்டு பின்னங்கால்களில் நேராக நின்று பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்திய ஃபுட்டா, ஜப்பான் முழுவதும் பெரும் பிரபலமானது. அதன் தனித்துவமான தோற்றம் விளம்பரங்களிலும் இடம்பெறும் அளவுக்குப் புகழ்பெற்றது. தற்போது வயது முதிர்வால் இரண்டு கால்களில் நிற்பது அதற்குச் சிரமமாக இருந்தாலும், உணவு உட்கொள்வதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவதாகப் பூங்கை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொதுவாக சிவப்பு பாண்டாக்கள் 12 முதல் 17 ஆண்டுகள் வரை வாழும் நிலையில், அந்த வயதைக் கடந்து 23 ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் ஃபுட்டாவின் சாதனை தனித்துவமானதாகக் கருதப்படுகிறது. இதனைக் கொண்டாட சுமார் 180 பேர் கலந்துகொண்ட நிகழ்வும் சிபா உயிரியல் பூங்காவில் நடைபெற்றுள்ளது. ஒரு காலத்தில் இரண்டு கால்களில் நின்று உலகைக் கவர்ந்த இந்தச் சிறிய உயிரினம், தற்போது தனது நீண்ட ஆயுளால் மீண்டும் உலகின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பியுள்ளது.