நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் (U/A) சான்றிதழ் வழங்கியுள்ளது. ‘அமரன்’ திரைப்படத்தின் இயக்குநர் 'ராஜ்குமார் பெரியசாமி' இயக்கியுள்ள இத்திரைப்படம், அதிரடி கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து மம்முட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு 'சாய் அபயங்கர்' இசையமைத்துள்ளார். அண்மையில் வெளியான திரைப்படத்தின் டிரெய்லரும் இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
முன்னதாக ஒக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இத்திரைப்படம், பின்னர் ஒத்திவைக்கப்பட்டு நவம்பர் 20ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தற்போது தணிக்கைச் சான்றிதழும் கிடைத்துள்ளதால், திரைப்படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து இரசிகர்கள் காத்திருக்கின்றனர்.