Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
18
கண்ணுக்குத் தெரியாத ஆபத்து! மாசுபட்ட காற்றிலிருந்து தப்பிப்பது எப்படி?

SOORIYAN GOSSIP - கண்ணுக்குத் தெரியாத ஆபத்து! மாசுபட்ட காற்றிலிருந்து தப்பிப்பது எப்படி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

58 Views

கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் சில பகுதிகளில் வளி மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுவது அவசியமாகியுள்ளது. காற்றில் காணப்படும் PM2.5 எனப்படும் நுண்ணிய தூசுத் துகள்கள் சுவாசப் பாதையைப் பாதிக்கக்கூடும். இதனால் தேவையற்ற வெளிப்புறப் பயணங்களைக் குறைப்பதுடன், காற்றின் தரம் மோசமாக இருக்கும் நேரங்களில் திறந்தவெளி உடற்பயிற்சிகளையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

 


 

வெளியே செல்ல வேண்டியவர்கள் N95 அல்லது KN95 முகக்கவசம் அணிவதுடன், வாகனப் புகை அதிகமுள்ள வீதிகளையும் தவிர்ப்பது நல்லது. வீட்டிற்குள் காற்று மாசு நுழைவதைக் குறைக்க, மாசுபாடு அதிகமாக இருக்கும் நேரங்களில் கதவு, ஜன்னல்களை மூடி வைக்கலாம். வசதியிருப்பின் HEPA வடிகட்டி கொண்ட காற்று சுத்திகரிப்பானைப் பயன்படுத்துவதுடன், வீட்டிற்குள் சிகரெட் புகை, நுளம்புத் திரியிலிருந்து வெளியாகும் புகை போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

மேலும், சிறுவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் ஆஸ்துமா அல்லது இதய நோயுள்ளவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். போதியளவு தண்ணீர் குடிப்பதுடன், பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வதும் ஆரோக்கியமான பழக்கமாகும். சுவாசிப்பதில் சிரமம், தொடர்ச்சியான இருமல் அல்லது மார்பு இறுக்கம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். வளியின் தரம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிப்பதும் அவசியமாகும்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top